கோலாலம்பூர், மே-6 – நாடாளுமன்ற மேலவைத் தலைவர் Datuk Mutang Tagal கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Azerbaijan நாட்டுக்குச் சென்றிருந்த போது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
அலுவல் பயணமாக ஏப்ரல் 29-ஆம் தேதி அங்கு பயணமான அவர், உடல் நல பாதிப்பால் முன்கூட்டியே இன்று அதிகாலை 1 மணிக்கு கோலாலம்பூர் வந்தடைந்தார்.
இந்த சிகிச்சைக் காலத்தில் தாம் நலம் பெற வேண்டி பிராத்தனை செய்த அனைவருக்கும் செனட்டர் நன்றி தெரிவித்துக் கொண்டதாக மேலவைத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கைத் தெரிவித்தது.
Ajerbaijan, Baku-வில் மே 1 முதல் 3 வரை நடைபெற்ற கலாச்சாரங்களுக்கு இடையிலான கலந்தாய்வு மீதான உலக ஆய்வரங்கில் பங்கேற்பதற்காக, Datuk Mutang தலைமையிலான மலேசியப் பேராளர் குழு அங்குப் பயணமானது.