
கிள்ளான், ஜனவரி-18 – சிலாங்கூர், கிள்ளான், பூலாவ் கெத்தாமில், 2 நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் வெளிநாட்டுத் தொழிலாளியை முதலாளி தாக்கியுள்ளார்.
ஜனவரி 11-ஆம் தேதி Bagan Teochew மீன் துரப்பண மேடையில் நிகழ்ந்த அச்சம்பவம் வைரலாகியுள்ளது.
உடம்பு சரியில்லாததால் வேலைக்கு வர இயலவில்லை எனக் கூறிய தொழிலாளியை, முதலாளி சரமாரியாகத் தாக்கி மிரட்டுவது வீடியோவில் தெரிந்தது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், மீன் வளர்ப்பாளரான 41 வயது முதலாளியை நேற்று மாலை கைதுச் செய்தது.
வேண்டுமென்றே காயம் விளைவித்தது மற்றும் மிரட்டல் விடுத்தது தொடர்பில் அவர் விசாரிக்கப்படுகிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஈராண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இவ்வேளையில், வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட ஏதுவாக, பாதிக்கப்பட்ட தொழிலாளியும் அடையாளம் காணப்பட்டு வருவதாக, தென் கிள்ளான் போலீஸ் கூறியது.