
தலைநகரிலுள்ள, பேரங்காடி ஒன்றின் உடை மாற்றும் அறையில் பொறுத்தப்பட்டிருந்த இரகசிய காமிரா வைரலான சம்பவம் தொடர்பில், போலீஸ் இதுவரை பணியாளர்கள், பராமரிப்பு தொழிலாளர்கள் உட்பட 11 பேரின் வாக்குமூலத்தை பதிவுச் செய்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், இதுவரை நான்கு வீடியோ பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக, டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நோர் டேல்லான் யாஹ்யா தெரிவித்தார்.
அதே சமயம், பெண் ஒருவர் அவ்விவகாரம் தொடர்பில் நேற்று போலீஸ் புகார் செய்ததையும் நோர் டேல்லான் உறுதிப்படுத்தினார்.
பேரங்காடி ஒன்றின் உடை மாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காமிரா பதிவு வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட பேரங்காடியின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு பிரிவு நிர்வாகி இம்மாதம் 11-ஆம் தேதி போலீஸ் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.