
கோலாலம்பூர், மே 21 – அண்மையில் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள உணவகத்தில் உணவுகளை உட்கொண்டபோது அதில் விரல்களின் ஆறு நகங்கள் இருந்தது கண்டு பெண் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். தமது தட்டில் இருந்த உணவுகளை பாதிக்கும் மேல் முடித்த பின்னர்தான் அதில் நகங்கள் இருந்ததை தமது தாயார் கண்டுப்பிடித்ததாக twitter பயனாளரான @ aliailysha தெரிவித்துள்ளார்.
உணவுகளுக்கு மத்தியில் இரண்டு நகங்கள் தெளிவாக இருப்பதையும் அந்த காணொளியில் அவர் பகிர்ந்துள்ளார். பாதியில் உணவு உட்கொண்டிருந்தபோது ஆறு நகங்கள் அவரது கையில் அகப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு நகங்களை அவர் வாயில் மென்றுள்ளார். இதனை நினைக்கவே ஒரே அறுவருப்பாக இருப்பதாக aliailysha குறிப்பிட்டுள்ளார்.
அவரது twitter பதிவுக்கு இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதோடு அது மீண்டும் 7,000 முறை tweet செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த உணவகம் வழங்கிய உணவின் தரத்தை தங்களால் நம்பமுடியவில்லையென நெட்டிசன்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.