
குளுவாங், நவம்பர் 10 – ஜொகூர், லாயாங்- லாயாங்கிலுள்ள, உணவகம் ஒன்றில், அடிபுடி சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐவரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
உள்நாட்டவர்களான, 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும், லயாங்- லயாங், குளுவாங்,ஜொகூர் பாரு ஆகிய இடங்களில் கைதுச் செய்யப்பட்டதாக, குளுவாங் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் பஹரின் முஹமட் நோ தெரிவித்தார்.
லயாங்- லயாங், ஜாலான் பூங்கா ராயாவிலுள்ள, உணகவம் ஒன்றில், ஆடவர்கள் கும்பல் ஒன்று, கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், இம்மாதாம் ஆறாம் தேதி, இரவு மணி. 10.37 வாக்கில் போலீஸ் புகார் ஒன்று செய்யப்பட்டதையும் பஹாரின் உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்டவர்களில், இருவருக்கு எதிராக பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் அனைவரும், விசாரணைக்காக, இம்மாதம் எட்டாம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்