Latestமலேசியா

உணவகத்தில் புகைப்பிடிக்கும் காவல்துறை அதிகாரிகளின் படங்கள் வைரல்; ஒழுங்கு விசாரணையை முடுக்கியுள்ளது பெட்டாலிங் ஜெயா காவல்துறை

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 9 – உணவகம் ஒன்றில், இரு காவல்துறை அதிகாரிகள் புகைப்பிடிக்கும், புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

X தளத்தின் வாயிலாகப் பயனர் ஒருவரின் மூலம் அறியவந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா காவல்துறை ஒழுங்கு விசாரணையைத் தொடங்க வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

பகிரப்பட்ட புகைப்படத்தின் படி, பெட்டாலிங் ஜெயா ரோந்து பணியில் MPVரக வாகனத்தில் சேவை செய்யும் அதிகாரிகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சட்டம் மற்றும் ஒழுக்கத்தை மீறுவது தொடர்பான பிரச்சனைகளில் ஒருபோதும் பெட்டாலிங் ஜெயா காவல்துறை சமரசம் செய்யாது என்று அதன் தலைவர் ஜெய ஷாருல்நிஜாம் (Jaya Shahrulnizam) கூறினார்.

இச்சம்பவம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!