Latestமலேசியா

உணவகத்தில் புகைப்பிடித்த ஆடவனை கண்டித்த இளைஞன் ; காணொளியால் பரபரப்பு

சிலாங்கூர், ஷா ஆலாமில், உணவகத்தில் புகைப்பிடித்த ஆடவனை பதின்ம வயது இளைஞன் ஒருவன் கண்டித்தால், அவ்வாடவன் சினமடைந்த காணொளி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த காணொளி, bckupacc99 எனும் ட்விட்டர் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடையில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருக்கும் அவ்வாடவனை அங்கு வரும் பதின்ம வயது இளைஞர் ஒருவர் கண்டிக்கிறார். அதனால், சினமடையும் அந்த ஆடவர், கடையின் பணியாளர்களே என்னிடம் கேள்வி கேட்க அஞ்சும் வேளை, நீ யார் என வினவுவதை அடுத்து அவ்விருவருக்கும் இடையில் வாய் சண்டை மூளும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.

அந்த காணொளியை இதுவரை எட்டு லட்சத்து 14 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ள வேளை ; எண்ணாயிரத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

இதனிடையே, அச்சம்பவம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ட்விட் செய்துள்ள கல்வி அமைச்சு, பொதுநலத்துடன் செயல்பட்ட சம்பந்தப்பட்ட இளைஞனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!