Latestமலேசியா

உணவகத்துக்கு நாய்களைக் கூட்டி வந்த இருவர்; ஜோகூர் பாருவில் தற்காலிகமாக மூடப்பட்ட ‘மாமாக்’ உணவகம்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-28 – ஜோகூர் பாரு, உலு திராம், Bandar Cemerlang-கில் உள்ள 24 மணி நேர இந்திய முஸ்லீம் உணவகமொன்றை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜோகூர் பாரு மாநகர மன்றம் (MBJB) அங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தங்களது வளர்ப்புப் பிராணிகளான இரு நாய்களுடன் வந்த இருவர், உணவகத்தில் அமர்ந்து உணவுண்ணும் புகைப்படம் வைரலானதே அதற்குக் காரணம்.

உரிமையாளர்களுக்கு அருகில் இரு நாற்காலிகளில் நாய்கள் அமர்ந்துக் கொண்டிருப்பதை அப்படங்களில் காண முடிந்தது.

அப்பதிவைப் பார்த்த நெட்டிசன்களில் பலரும், முஸ்லீம்களின் உணர்ச்சியைப் புரிந்துக் கொள்ளாமல், உணவகத்துக்கு நாய்களைக் கூட்டி வந்த அந்த இருவரையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இவ்வேளையில், வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வர தாங்கள் அனுமதிப்பதாக் கூறப்படுவதை மறுத்து, உணவக உரிமையாளரும் உலு திராம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!