கோலாலம்பூர், பிப் 16 – அம்பாங் தாமான் Melawati யிலுள்ள உணவக உரிமையாளரை மிரட்டி மாதந்திர பாதுகாப்பு பணம் கேட்டதன் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைது செய்ப்பட்டனர்.
27 முதல் 44 வயதுக்குட்பட்ட சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் அந்த உணவகத்தில் கைது செய்யப்பட்டதாக Ampang Jaya மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Farouk Eshak தெரிவித்தார். அவர்களிடமிருந்து மூன்று கைதொலைபேசிகள், உணவக உரிமையாளரிடம் மிரட்டி பெறப்பட்ட ரொக்கத் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.