ஜோர்ஜ்டவுன், பிப் 3 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், பாடாங் கோத்தா லாமாவிலுள்ள ( Padang Kota Lama), Medan Renong உணவு அங்காடிகள் தளத்தில் நிகழ்ந்த கைகலப்பிற்கு, அங்கு வியாபாரம் செய்யும் இரு வியாபாரிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடே காரணமாகும்.
முன்னதாக , இரவு மணி 11-வாக்கில் நிகழ்ந்த அந்த கைகலப்பு தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது.
அந்த உணவு அங்காடி தளத்தில், நீண்ட காலமாகவே வியாபாரம் செய்து வரும் சம்பந்தப்பட்ட இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடும் தனிப்பட்ட பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. எனினும் , அவ்விருவருக்கு இடையிலான பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டிருப்பதாக, அந்த உணவு அங்காடி தளத்தில் வியாபாரம் செய்வோர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். கடை மூடும் சமயத்தில் அந்த கைகலப்பு நிகழ்ந்ததாகவும், சம்பவத்தின் போது, வாடிக்கையாளர்கள் யாரும் காயமடையவில்லை எனவும் அவர் கூறினார்.