
ஜோர்ஜ் டவுன், பிப் 5 – பினாங்கு ஜெலுத்தோங்கில் உள்ள உணவு கையிருப்பு கிடங்கு தீயில் அழிந்தது. நேற்றிரவு மணி 10.28 அளவில் அந்த கிடங்கில் தீப்பற்றியதாக தகவல் அறிந்ததைத் தொடர்ந்து ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த கட்டிடத்தின் 80 விழுக்காடு பகுதி தீயில் சேதம் அடைந்ததாக தீயணைப்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.