Latestமலேசியா

உணவு விநியோகிக்க சென்ற பெண்ணின் 1,800 ரிங்கிட் தங்க வளையல் கொள்ளை

ஷா ஆலாம், பிப் 2 – ஷா ஆலாம் , தாமான் ஶ்ரீ முடா , ஜாலான் 25/ 30 பகுதியில், பகுதி நேரமாக உணவு விநியோகிப்பாளராக வேலை செய்து வரும் பெண்ணிடம், பாராங்கத்தி ஏந்திய இரு ஆடவர்கள் கொள்ளையிட்டு சென்றனர்.

சம்பவத்தின்போது அந்த பெண், காலை மணி 9. 30 அளவில் வாடிக்கையாளருக்கு உணவை விநியோகிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவர்களில் ஒருவன், தனது கையில் அணிந்திருந்த தங்க வளையலை பறித்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பதாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் பஹாருடின் மட் தாயிப் ( Baharudin Mat Taib) தெரிவித்தார்.

அந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் 29 வயது மதிக்கத்தக்க அந்த பெண் உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் அந்த பெண் அணிந்திருந்த தங்க வளையலின் மதிப்பு 1, 800 ரிங்கிட் எனவும், கொள்ளையிட்டவர்கள் அந்நிய நாட்டவர்கள் எனவும் தெரிய வந்திருப்பதாக அவர் கூறினார்.

உடல் எலும்பாக இருந்த அந்த இந்தோனேசிய நாட்டவர்கள் சிவப்பு நிற யமஹா எல்.சி ( Yamaha L.C ) ரக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களது சட்டைக்குள் பாரங்கத்தி மறைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக , தான் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை பாதிக்கப்பட்டவர் அந்த பெண், நூராதிகா கமாரூடின் ( Nuratiqa Kamarudin) எனும் ஃபேஸ்புக் கணக்கின் மூலமாக விவரித்திருந்தார். அவரது அந்த பதிவு பின்னர் வைரலாகியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!