Latestமலேசியா

உணவு விநியோகிப்பாளர்களின் மறியல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

கோலாலம்பூர், ஆக 5 – இன்று உணவு விநியோகிப்பாளர்கள் மறியலில் ஈடுபடுவோம், அதனால் உணவு எங்கும் விநியோகிக்கப்படாது என கூறியிருந்தனர். இதனால், பெரிய அளவில் இன்று உணவு விநியோகிப்பில் தடை ஏற்பட்டு வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்,உணவு விநியோகிப்பாளர்களில் பலர் வழக்கம்போல் தொடர்ந்து தங்களது சேவையை வழங்கியதால் உணவு விநியோகத்தை புறக்கணிபோம் என்ற மறியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.
ஆங்காங்கே, உணவு விநியோகிப்பாளர்கள் வழக்கம்போல தங்களது சேவையை வழங்கி வந்தனர்.
ஒரு சில விநியோகிப்பாளர்கள், இன்று நடத்தப்படும் மறியல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எங்களுக்கு தெரியும், அதனால்தான் நாங்கள் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டோம் என கூறியுள்ளனர்.
எங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க இதுபோன்ற மறியல் சமயத்தில் வாடிக்கையாளர்களும், கடைக்காரர்களும் கூட்டாக ஒத்துழைக்காவிட்டால் அம்மறியல் வெற்றிபெறாது.
2019ஆம் ஆண்டு உணவு விநியோகிப்பாளர்கள் பெரிய அளவில் மறியலில் ஈடுபட்டபோதிலும் அந்த நடவடிக்கை வெற்றி பெறவில்லையென சிலர் உணவு விநியோகிப்பாளர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!