Latestமலேசியா

இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக மற்றொரு பெருந்திட்டத்தை அன்வார் தலைமையிலான அரசாங்கம் உருவாக்குமா? – செனட்டர் லிங்கேஸ்வரன் கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 18 – ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்தியர்களுக்கான Blue Print எனப்படும் பெருந் திட்டம் ஒன்றை உருவாக்குமா என பினாங்கு DAP மேலவை உறுப்பினரான டாக்டர் லிங்கேஸ்வரன் வினவினார்.

கடந்த வாரம் மித்ர விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. மித்ராவுக்கான தொலைநோக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவற்கான பெருந்திட்டத்தை வரைவதற்கு PEMANDU ஆலோசனை நிறுவனம் அமைக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் ஒற்றுமைத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

அதோடு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரிங்கிட் அந்த ஆலோசனை நிறுவனத்திற்கு கட்டணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த வேளையில் ஒற்றுமைத்துறை அமைச்சரிடம் சில கேள்விகளையும் இன்று மேலவையில் லிங்கேவரன் முன்வைத்தார்.

மித்ராவின் தலைவராக நியமிக்கப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனின் பங்கேற்பு என்ன? தற்போது மித்ரா ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால் இந்திய சமூக தலைவர்களிடையே குழப்பம் ஏற்பட்டிடுள்ளது. ஒற்றுமை துறை அமைச்சில் இந்திய சமூகத்தை சேர்ந்த துணையமைச்சரும் இருப்பதால் மித்ராவுக்கு உண்மையில் யார்
தலைமையேற்கின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மித்ரா நிதியை அங்கீகரிக்கும் விவகாரத்தில் முடிவு எடுப்பது யார் என்பதையும் விளக்க வேண்டும். மித்ரா தொடர்பாக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு
PEMANDU வை ஆலோசனை நிறுவனமாக யார் நியமித்தது?

இந்த விவகாரத்தில் இதர நிறுவனங்களும் பரிசீலிக்கப்பட்டதா ? எந்த அடிப்படையில் மித்ராவின் ஆலோசனை நிறுவனமாக PEMANDU தேர்வு செய்யப்பட்டது அல்லது அவர்களுக்கான திட்டம் வழங்கப்பட்டது. PEMANDU வின் அடைவு நிலை என்ன?

தொடக்கத்தில் PEMANDU வுடன் இரண்டு நாள் கலந்துரையாடல் நடைபெறும் என கூறப்பட்டது, பிறகு அந்த கலந்துரையாடல் 4 மணிநேரம் மட்டுமே நடைபெறும் என பிறகு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து விவாதிக்க அந்த நேரம் போதுமா?

அந்த கலந்துரையாடலுக்கு பதிவு பெற்ற சில அரசியல் கட்சிகளுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை . இந்த கலந்துரையாடலுக்கு இந்தியர்களின் விவகாரங்களில் தொடர்பு இல்லாத பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என் என்றும் லிங்கேஸ்வரன் கேள்வி எழுப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!