Latestமலேசியா

உணவு விநியோகிப்பாளர்களின் பிரதிநிதிகள் திங்களன்று போக்குவரத்து அமைச்சரை சந்திப்பார்கள்

கோலாலம்பூர், ஆக 6 – ரைடர்ஸ் எனப்படும் மோட்டார் சைக்கிள்களில் உணவு விநியோகிப்பு சேவை மேற்கொள்வோர் மற்றும் Grab ஓட்டுனர்களின் பிரதிநிதிகள் தங்களது புகார்கள் குறித்து விவாதிப்பதற்காக போக்குவத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரை சந்திக்கவிருக்கின்றனர்.

திங்கட்கிழமையன்று அவர்கள் வீ கா சியோங்கை சந்திப்பார்கள் என பிரதமரின் அரசியல் செயலாளர் Khaizulnizam Mohamad Zuldin தெரிவித்திருக்கிறார். மனித வள அமைச்சருடனான சந்திப்பும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும். ஓட்டுனர்கள், ரைடர்ஸ், பயனீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் நன்மை அடையும் வகையில் முடிவு எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் நம்புவதாக Khaizulnizam செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சேவைகளுக்கான கட்டணம் விதிக்கும் நிறுவனம் அந்த கட்டணத்தை குறைத்துள்ளது குறித்து சங்கம் அதிருப்தி அடைந்துள்ளதாக ரைடர்ஸ் வினியோகிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் Abdul Hakim Abdul Rani தெரிவித்தார். எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன் தங்களது மனக்குறை செவிமடுக்கப்பட வேண்டும் என Grab ஓட்டுனர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் Mohd Azril Ahmat நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!