
கோலாலம்பூர், ஜூன் 16 – உணவு விநியோக விவகாரங்களுக்கு தீர்வு காண கூடுதல் நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் கண்டுள்ளது. உள்நாட்டில் உணவுப் பொருட்களின் விளைச்சளை அதிகரிப்பதும் அந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும் என விவசாயம் மற்றும் உணவு தொழில்துறை அமைச்சர் Ronald kiandee தெரிவித்தார். மலேசிய குடும்ப சமூக விவசாய தோட்ட திட்டம், வளர்ப்பு மீன்கள் கையிருப்பு திட்டம் ஆகிய அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படும். சமூக உறுப்பினர்கள், தொழில் முனைவர்கள், கூட்டுறவு கழகங்களின் உறுப்பினர்களும் இந்திட்டத்தில் பங்கேற்பார்கள் என Ronald Kiandee கூறினார்.