Latestமலேசியா

13 மாநிலங்களில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீட்டை கொடுங்கள் ; பேரரசர் வலியுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 – 13 மாநிலங்களிலுள்ள, அனைத்து நகரங்களுக்கும் அரசாங்கம் சரிசமமான நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூருக்கு மக்கள் அதிகம் இடம்பெயர்வதை தவிர்க்க, அனைத்து மாநிலங்களிலும் அரசாங்கம் சீரான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதன் வாயிலாக, நெரிச்சல் பிரச்சனையையும் தவிர்க்க முடியுமென பேரரசர் குறிப்பிட்டார்.

அதனை விடுத்து, மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருப்பதால், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிற்கு, கூடுதல் நிதி வழங்கப்படுகிறதா எனவும் பேரரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோலாலம்பூரும், புத் ராஜெயாவும் பதிவுச் செய்துள்ள அபரிமித வளர்ச்சியால், அங்கு மக்கள் அதிகம் இடம்பெயருகின்றனர்.

அதனால், அவ்வொரு பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து வருகிறது.

இவ்வேளையில், நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் சுற்றுசூழல் தூய்மையை பேண வேண்டுமெனவும் பேரரசர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, தலைநகரிலுள்ள சில பகுதிகள் இன்னும் அசுத்தமாக காணப்படுவதை தாம் நேரில் கண்டறிந்ததையும் பேரரசர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!