
அமெரிக்கா, வாஷிங்டனிலுள்ள உணவகம் ஒன்றில், ஆர்டர் செய்த ‘டகோஸ்’ சுருல் உணவு, விரைவாக சமைக்கப்படாததால், சினமடைந்த வாடிக்கையாளர் ‘வெறித்தனமாக’ நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது, உணவக பணியாளரின் கையில் இருந்த டகோஸ் உணவு பொட்டலத்தை அந்த ஆடவர் பிடித்து இழுக்க முயன்றுள்ளார்.
எனினும், அதற்குள் அந்த பணியாளர் அந்த உணவை குப்பை தொட்டியில் போட்டு விட்டதால், சினமடைந்த வாடிக்கையாளர் அங்கிருந்த பொருட்களை எடுத்து பணியாளரை நோக்கி வீசியுள்ளார்.
அந்த தாக்குதலில் இருந்து தப்ப அந்த பணியாளர் உணவகத்தின் பின்புறம் நோக்கி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என, மெட்ரோபோலிடன் (Metropolitan) போலீசார் தெரிவித்தனர்.