Latestஉலகம்மலேசியா

உதவித் தொகை குறித்த பொய் தகவலினால் சந்தையில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு

புத்ராஜெயா, ஜூன் 30 – சமையல் எண்ணெய் உதவித் தொகை குறித்து பகிரப்படும் பொய்யான செய்திகளினால், சந்தையில் கையிருப்பு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு, மக்கள் அந்த சமையல் பொருளை அதிகளவில் வாங்கி வைத்திருப்பதாக கூறியிருக்கின்றார் தகவல் தொடர்பு- பல்லூடக அமைச்சர் Tan Sri Annuar Musa.

நாட்டில் மாதத்திற்கு மக்களின் பயன்பாட்டுக்கு 50,000 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது.
எனினும், மாதத்திற்கு 60,000 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய்-யிற்கு அரசாங்கம் உதவித் தொகை வழங்குகிறது. கூடுதலாக சமையல் எண்ணெய் கையிருப்பு இருந்தாலும் , சந்தையில் அப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதால் , அந்நிலையை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!