
உதவி தொகை வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என, உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ சலாவுடின் அயூப், மக்களவையில் இன்று தெரிவித்தார்.
மாறாக, மைய தரவு கட்டமைப்பு முழுமையாக செயல்பட தொடங்கியதும், இலக்கிடபட்ட மானிய முறை அல்லது தகுயானவர்களுக்கு மட்டும் மானியம் வழங்கும் முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்துமென, அமைச்சர் சொன்னார்.
வாழ்க்கை செலவின அதிகரிப்பால், மக்கள் அவதியுற்று வரும் வேளையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பது ஏற்புடையதாக இருக்காது.
அதனால், மக்களின் நலன் கருதி, உதவித் தொகையை அரசாங்கம் நிலைநிறுத்தும் என்றாரவர்.