
உதவிப் போலீசாரின் அடையாள அட்டையை காட்டி, சாலையில் ‘அடாவடியாக’ நடந்து கொண்ட ஆடவன், வங்கி ஒன்றின் உதவிப் போலீஸ் படை உறுப்பினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர், Duke நெடுஞ்சாலையில், சம்பந்தப்பட்ட ஆடவன் தனது, உதவிப் போலீஸ் அட்டையை காட்டி மற்றொரு வாகனமோட்டியிடம் அடாவடியாக நடந்து கொள்ளும் காணொளி முகநூலில் வைரலாகியுள்ளதை, தமது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாக, வங்சா மாஜூ போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹசாரி அபு சாமா தெரிவித்தார்.
அவ்வாடவன், அபாயகரமான முறையில் ஹோண்டா சிட்டி காரை செலுத்தி, தனது பயணத்திற்கு இடையூறை ஏற்படுத்தியதாக, அதில் சம்பந்தப்பட்ட மற்றொரு காரோட்டி, ஏப்ரல் 30-ஆம் தேதி புகார் செய்துள்ளார்.
எனினும், முன்னறிவிப்பு எதுவும் இன்றி திடீரென பாதையை மாற்றியதால் தான் பிரச்சினை மூண்டதாக, அவ்வாடவன் தமது தரப்பு புகாரில் குறிப்பிட்டுள்ளான்.
மேல் நடவடிக்கைக்காக அவ்விவகாரம், சம்பந்தப்பட்ட ஆடவன் பணிப்புரியும் உதவிப் போலீஸ் பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.