
கெடா, யானில், உதவி தீயணைப்பு மீட்புப் படை வீரர் ஒருவரை கடித்து விட்டு தப்பிச் சென்ற கரடி பிடிப்பட்டது.
90 கிலோகிராம் எடைக்கொண்ட அந்த பெண் கரடி, நேற்று நண்பகல் மணி 12.50 வாக்கில், மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டதாக, கெடா மாநில தேசிய பூங்கா – வனவிலங்கு பாதுகாப்பு துறையின் இயக்குனர் ஜமாலூன் நாசிர் இப்ராஹிம் தெரிவித்தார்.
அக்கரடி, கூனோங் ஜெராய் மலைப் பகுதியிலிருந்து வழிதவறி கம்பத்தில் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அக்கரடி தற்சமயம் பேராக், சுங்கையிலுள்ள வனவிலங்கு பாதுகாப்பு துறைக்கு அனுபப்பட்டுள்ளது.
நேற்று அக்கரடியை பிடிக்க முயன்ற உதவி தீயணைப்பு மீட்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.