
கோலாலம்பூர், ஜூன் 19 – உதவி பெற்ற எண்ணெயை கடத்தும் கும்பலுடன் உடந்தையாக இருக்கும் எண்ணெய் நிலையங்கள் மீது விசாரணை நடத்தப்படும். உதவிபெற்ற டீசலை கடத்தும் கும்பலுடன் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையங்கள் மூடப்படும் என உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் தலைமை இயக்குனர் Azman Adam எச்சரித்தார். இதுவரை நாடு முழுவதிலும் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்த 9 எண்ணெய் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 1961-ஆம் ஆண்டின் பொருள் கட்டுப்பாடு சட்டத்திற்கு ஏற்ப விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.