
ஜாசின், செப் 6 – ஒரு தோட்ட நிறுவனம் வங்கியில் பணம் எடுப்பதற்கு துணையாக வந்த உதவி போலிஸ்காரர் ஒருவர் தவறுதலாக சுட்டதில் வங்கி வாடிக்கையாளர்கள் இருவர் மற்றும் ஒரு காவலாளி காயமுற்றனர். இச்சம்பவம் மலாக்கா ஜாசினில் நடந்துள்ளது.
நேற்று மதியம் 12.55 நடந்த அச்சம்பவத்தை தொடர்ந்து அந்த 59 வயது உதவி போலிஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜாசின் OCPD Ahmad Jamil Radzi தெரிவித்தார். உதவி போலிஸ்காரர் துப்பாக்கியை கவனக்குறைவாக கையாண்டுள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சூடு பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் 26 மற்றும் 46 வயது பெண்கள் என்று அவர் கூறினார். காவலாளிக்கு வயது 26.
நல்ல வேளையாக அவர்களுக்கு சிறு காயம்தான் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடி சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. அந்த உதவி போலிஸ்காரர் தோட்ட நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாக Ahmad Jamil கூறினார். அச்சம்பவம் தொடர்பில் தற்போது மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது