லக்னோ, செப்டம்பர் -23, மனிதர்கள் விலங்குகளைக் காப்பாற்றிய காலம் போய், விலங்குகளும் அவ்வப்போது மனிதர்களைக் காப்பாற்றும் சம்பவங்கள் அரிதாய் நடக்கத்தான் செய்கின்றன.
அப்படியொரு சம்பவம் தான் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆடவனை, குரங்குகள் கடித்து விரட்டியுள்ளன.
குரங்குகளின் உதவியுடன் தப்பிய அச்சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறினாள்.
இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் CCTV கேமரா பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.