
கோலாலம்பூர், ஆக 7- பக்காத்தான் ஹரப்பான் நிர்வாகத்தின்போது மூன்று சீரமைப்ப்பு திட்டங்களை மேற்கொண்ட தமது முயற்சிகள் டாக்டர் மகாதீரின் விருப்பத்திற்கு எதிராக இருந்ததால் நிதியமைச்சர் பதவிலியிருந்து நீக்கப்போவதாக மூன்று முறை தம்மை துன் டாக்டர் மகாதீர் மிரட்டியதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.
இதனால் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு தாம் மூன்று முறை தயாராய் இருந்ததாக லிம் குவான் எங் கூறினார். நேரடி பேச்சுக்களின் மூலம் வழங்கப்படும் அரசாங்க குத்தகைகளை மறுபரிசீலனை செய்வது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆண்டு ஒதுக்கீடாக 38 லட்சம் ரிங்கிட் வழங்குவது , பிளஸ் டோல் கட்டணத்தை குறைப்பது போன்ற தமது முயற்சிகளையும் பரிந்துரைகளையும் டாக்டர் மகாதீர் நிராகரித்தாக லிம் குவான் எங் கூறினார்.
நிதியமைச்சர் என்ற முறையில் அவரது உத்தரவை மீறியதற்காக தம்மை நீக்கவிருப்பதாக மூன்று முறை மகாதீர் தம்மை மிரட்டியதாக எச்சரித்தாக லிம் தெரிவித்தார். அமைச்சர்களின் உத்தேச சீரமைப்பு முயற்சிகளையம் அந்த முன்னாள் பிரதமர் நிராகரித்தார். எனது முயற்சிக்கு அமைச்சரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த போதிலும் மூன்று முறையும் மகாதீர் நிராகரித்தார் என லிம் குவான் எங் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை நிதியமைச்சராக இருந்தபோது இந்த முயற்றியை மேற்கொண்டதாக தமது முகநூலில் லிம் குவான் எங் தெரிவித்தார்.