Latestஇந்தியாஉலகம்

உத்தர பிரதேசத்தில் பயங்கரம்; இராட்டினத்தில் சிறுமியின் முடி சிக்கி தோலோடு பிய்த்துக் கொண்ட பரிதாபம்

உத்தர பிரதேசம், நவம்பர்-25, இந்தியா, உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த பயங்கரமான சம்பவத்தில், இராட்டினத்தில் சிக்கிக் கொண்ட சிறுமியின் முடி தோலோடு பெயர்ந்து வந்தது.

மதோநகர் எனும் குக்கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியின் போது அந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.

13 வயது Anuradha Katheria இராட்டினத்தில் ஏறி விளையாடிய போது, திடீரென சவாரி சுழலத் தொடங்கி அவளின் முடி சிக்கிக் கொண்டது.

வலியால் சிறுமி அலறித் துடித்த நிலையில், இராட்டினம் நிற்கும் வரை முடி விடுபடவில்லை.

அதற்குள் சிறுயிமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தோலோடு தலைமுடியும் பிய்த்துக் கொண்டு வந்தது.

இரத்தக் காயத்தோடு உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டாள்.

எனினும் நிலைமை மோசமாகவே, தீவிர சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மற்றொரு நிபுணத்துவ மரருத்துவமனைக்கு அனுராதா மாற்றப்பட்டாள்.

சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!