லக்னோ, பிப் 10 – இந்தியாவில் உத்தர பிரேதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கியது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று 2 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிப்பர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீன ஜனதா கட்சிக்கு உத்தர பிரதேச மாநில தேர்தல் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இம்முறையும் உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும் என கருத்துக் கணிப்புக்கள் கூறினாலும் அக்கட்சிக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் அகிலேஸ் யாதாவ் தலைமையிலான Samajwadi கட்சி திகழும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Related Articles
Check Also
Close