Latestமலேசியா

உம்ரா யாத்ரீகர்களை உட்படுத்திய 16 கோவிட் தொற்று மையங்கள்

கோலாலம்பூர், ஜன 12 – கடந்தாண்டு நவம்பர் 25 -ஆம் தேதி தொடங்கி, நேற்று வரையில் சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய உம்ரா யாத்ரீகர்களை உட்படுத்திய 16 கோவிட் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதில் 7 தொற்று மையங்களில், தொற்றைப் பரவச் செய்த நபர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

இதனிடையே, அந்த தொற்று மையங்கள் அனைத்தும் பகாங், கிளந்தான், கெடா ,ஜோகூர், சபா, லபுவான், சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!