கோலாலம்பூர், ஜன 5 – தேசிய உயரம் தாண்டும் வீரரான Nauraj Sing Randhawa செக் குடியரசில் அண்மையில் நடைபெற்ற திடல் தட போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் 2.27 மீட்டர் உயரத்திற்கு உயரம் தாண்டியுள்ளார். இதற்கு முன்னர் இருந்த தேசிய சாதனையை விட நுட்ப ரீதியில் இது புதிய சாதனையாக உள்ளது. எனினும் இந்த சாதனை குறித்து அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த பின்னரே அதனை புதிய தேசிய சாதனையாக மலேசிய அமெச்சூர் ஓட்டப்பந்தய சங்கம் அங்கீகரிக்கும் என தேசிய ஓட்டப்பந்தய குழுவின் தலைமைப் பயிற்சியாளர் Mohd Manshahar Abdul Jalil தெரிவித்தார். எந்தவொரு சாதனையை அங்கீகரிப்பதற்கு முன் இதுவே வழக்கமான நடைமுறை என அவர் விவரித்தார். இந்த சாதனையை மலேசிய ஒலிம்பிக் மன்றம் மற்றும் மலேசிய அமெச்சூர் ஓட்டப்பந்தய சங்கம் அங்கீகரிக்குமானால் இவ்வாண்டு Hangzhou ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கு Nauraj Singh தகுதி பெறுவார்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி15 hours ago