
கோலாலம்பூர், மார்ச் 17 – 2025-ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு உயரில் தொழில் திறன் தொழிலாளர்களை உருவாக்கும் பொருட்டு நூறு நிறுவனங்களுடன் இணைந்து செயப்படுவதில் மனித வள அமைச்சு ஒத்துழைக்கும் என்று அதன் அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் 6.7 பில்லியன் ரிங்கிட்டை தொழில் கல்விக்கு ஒதுக்கி வருகிறது. எனவே நாட்டின் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களை உருவாக்க மனித வள அமைச்சு பாடுபடும் என சிவக்குமார் கூறினார்.
மேற்கத்திய நாடுகளில் தொழில்திறன் கல்வியை கற்பதில் அதிக மாணவர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். அதனால் ஜெர்மனி போன்ற நாடுகள் தொழில்துறையில் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதோடு தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களும் உயரிய வருமானத்தை பெறுவதையும் சிவக்குமார் சுட்டிக்காட்னார். மலேசியாவும் இந்த இலக்கை நோக்கி செயல்படுவதற்கு நேரம் வந்துவிட்டதால் தொழில் திறன் பயிற்சிக்கு மனித வள அமைச்சு தொழில்துறை பயிற்சிக்கு என அவர் விவரித்தார்.