Latestமலேசியா

உயர் வருமானம் பெறும் T20 தரப்பினர் ஹாஜ் யாத்திரை செல்வதற்கு RM33,300 முழு கட்டணத்தை செலுத்த வேண்டும்

கோலாலம்பூர், டிச 16 – அடுத்த ஆண்டு ஹாஜ் யாத்திரைக்கு செல்வதற்கான உயர் வருமானம் பெறும் T20 தரப்பைச் சேர்ந்த ஒரு நபருக்கு 33,300 ரிக்கிட்டாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முழு கட்டணத்தையும் சொந்தமாக செலுத்த வேண்டும். அதே வேளையில் B40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு 55 விழுக்காடு அல்லது 18,000 ரிங்கிட் உதவித் தொகை, கூடுதலாக அரசாங்கம் ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்குவதால் அவர்கள் யாத்திரிக செலவுக்கு 15,000 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டும். M40 எனப்படும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு 29 விழுக்காடு உதவித் தொகை அடிப்படையில் 23,500 ரங்கிட்டை செலுத்த வேண்டும் .

Lembaga Tabung Haji எனப்படும் யாத்திரிக நிதி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி Syed Hamadhah Syed Othman இதனை தெரிவித்தார். . இந்த ஹஜ் யாத்திரை காலத்திற்கான உதவி நிதி 261 மில்லியன் ரிங்கிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 2.8 பில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான தொகையை கொண்டிருப்பதாக Syed Hamadhah செய்தியார்களிடம் தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட வருங்கால ஹஜ் யாத்திரிகர்களுக்கு , இன்று முதல் கட்டம் கட்டமாக 31,600 பேருக்கு சலுகைக் கடிதங்கள் வழங்கப்படும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!