
கெமாமான், மார்ச் 13 – தன்னை ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளானதை அடுத்து, குதிரை ஒன்று நெடுஞ்சாலையில் தன்னந்தனியாக ஒடிச் சென்ற அரிய காட்சியக் கண்டு, வாகனமோட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த சம்பவம், திரெங்கானு, கெமாமான் Cheneh பகுதிக்கு அருகில் இரண்டாவது கிழக்குகரை நெடுஞ்சாலை பகுதியில் நிகழ்ந்தது.
இன்று காலை மணி 9.30-க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில், திக்கு தெரியாது சாலை நடுவே ஓடிய அந்த வெண் குதிரையை , ஒன்றரை மணி நேரம் கழித்து அதன் உரிமையாளர் மீண்டும் அடக்கி பிடித்தார்.
முன்னதாக அந்த குதிரையை ஏற்றிச் சென்ற Ford Pikap வாகனம், லாரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக , கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் (Hanyan Ramlan ) தெரிவித்தார்.