
பஹாங், பெராவிலுள்ள, வீடொன்றில் புகுந்த முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டின் உரிமையாளரான 56 வயது நபரை வெட்டி காயப்படுத்தி விட்டு, அவரது கறுப்பு நிற Toyota Fortuner வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
அவசர அழைப்பை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு வீட்டின் உரிமையாளர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டதாக, பெரா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் என். குமரன் தெரிவித்தார்.
கால் மற்றும் கைகளில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அந்நபர் பின்னர் தெமர்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்நபரிடமிருந்து திருடிச் செல்லப்பட்ட Toyota Fortuner வாகனம், பின்னர் நெகிரி செம்பிலான், பெல்டா சுங்கை லூய் பகுதியிலுள்ள ரப்பர் தோட்டம் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையும் குமரன் உறுதிப்படுத்தினார்.
அச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள், 09-2507999 என்ற எண்களில் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.