Latestமலேசியா

உறவுக்கார பிள்ளைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டை மறுத்து தம்பதியர் விசாரணை கோரினர்

அம்பாங், செப் 23 – சிலாங்கூர், அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில், உறவுக்கார பிள்ளைகளை அடித்து துன்புறுதிய குற்றச்சாட்டை, மறுத்து தம்பதியர் விசாரணை கோரினர். 34 வயது Julianah Omar, 29 வயது Muhammad Asyari Mohd Alwi ஆகிய இருவருக்கு எதிரான இரு குற்றச்சாட்டுகள், நீதிபதி வான் முஹமட் நோரிஷாம் வான் யாகோப் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

ஆறு வயதுக்கும், எட்டு வயதுக்கும் இடைப்பட்ட இரு உறவுக்கார பிள்ளைகளை பராமரிக்கும் அவ்விருவரும், அவர்களை அடித்து காயம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட்டு மாதத்திற்கும், இம்மாதம் 16-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், தாமான் சாஹாயா அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

2001-ஆம் ஆண்டு, சிறார் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட வேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். தலா பத்தாயிரம் ரிங்கிட் உத்தரவாத் தொகையில், தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவ்விருவரையும் விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இவ்வழக்கு விசாரணை நவம்பர் மூன்றாம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!