
கோலா திரெங்கானு, நவ 9- உறுதியற்ற வானிலையால் இந்த வார தொடக்கத்திலிருந்து கோலா திரெங்கானு உட்பட நாட்டின் முக்கிய நகர்களில் பல்வேறு மீன்களின் விலை மூன்று ரிங்கிட் முதல் 5 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளது. கோலா திரெங்கானுவில் மக்கள் அதிகமாக விரும்பி உட்கொள்ளும் செலாயாங் மீன் ஒரு கிலோ ஆறு ரிங்கிட்டிலிருந்து 10 ரிங்கிட்டாக உயர்ந்தது. கெம்போங் மீன் ஒரு கிலோ 17 ரிங்கிட்டிலிருந்து 20 ரிங்கிட்டாக அதிகரித்தது. கிழக்குக் கரை பருவ மழையினால் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் மீன்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் மீன் விநியோகம் குறைவாக இருப்பதால் விலை அதிகமாக இருப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோ 16 ரிங்கிட்டாக விற்கப்பட்ட ஈகான் செலார் (Ikan Selar) தற்போது ஒரு கிலோவுக்கு 20 ரிங்கிட்டாக உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.