கோலாலம்பூர், பிப் 6 – திருமணச் சேவை திட்டம் தொடர்பில் மோசடி செய்ததாக நம்பப்படும் தந்தை மகன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
24 வயதுடைய பெண் ஒருவர், நிறுவனமொன்றில் திருமணத்துக்கான சேவைகளுக்கு பதிவு செய்துக் கொண்டிருந்தார். மண்டபம், கேட்டரிங் , திருமண ஆடை , புகைப்படம் ஆகியவற்றுக்காக முன்பணமாக 7, 265 ரிங்கிட்டையும் செலுத்தியிருந்தார்.
எனினும் உறுதியளித்தது போல் அந்த நிறுவனம் திருமணச் சேவையை வழங்கவில்லை என அப்பெண் போலீஸ் புகார் செய்ததாக, கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு துறையின் தலைவர் மஹிடிஷாம் ஈஷாக் தெரிவித்தார்.
அந்த போலீஸ் புகாரை அடுத்து, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 57, 25 வயதுடைய தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டதாக, அவர் கூறினார்.