Latestமலேசியா

தானியங்கி வாகன பதிவு எண் அடையாள முறை; ‘தடை இல்லாத’ டோல் கட்டண முறையுடன் செயல்படுத்தப்படும்

கோலாலம்பூர், நவம்பர் 6 – நாட்டிலுள்ள, நெடுஞ்சாலைகளில், MLFF – தடையில்லா டோல் கட்டணம் செலுத்தும் முறையின் சோதனை, அடுத்தாண்டு தொடங்கும்.

அதோடு, தானியங்கி வாகன பதிவு எண் அடையாள முறையும் ஒருங்கே செயல்படுத்தப்படும்.

அதனால், தற்போது வெளிநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும், MLFF – “பாலாங்” எனப்படும் தடை இல்லாத கட்டண முறையை தமதமைச்சு ஆராய்ந்து வருவதாக, பொதுப் பணி துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்சமயம் 416 RFID கட்டண முகப்புகள் உள்ளன.

அதோடு, MLFF முறையையும், தானியங்கி வாகன பதிவு எண் அடையாள முறையையும் அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, அதிவேக சேவையை வழங்க முடியும் என்பதோடு, வாகனங்களின் பதிவு எண்ணையும் எளிதாக கண்காணிக்க முடியுமென, அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

தற்சமயம் அந்த முறைகள் குறித்து ஆராயப்பட்டு வரும் வேளை ; அடுத்தாண்டு அவற்றை சோதனைக்கு உட்படுத்துவதன் வாயிலாக, நம் நாட்டில் அவற்றின் பயன்பாடு ஏற்புடையதா என்பதையும் கண்டறிய முடியுமென, துணையமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுமக்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்வதை உறுதிச் செய்யும் வகையில், பொதுப் பணி அமைச்சும், LLM நெடுஞ்சாலை வாரியமும், தற்போதுள்ள சாலை கட்டண வசூலிப்பு முறையை மேம்படுத்த, தொடர் பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் துணையமைச்சர் மக்களவையில் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!