பொந்தியான், ஜன 8 – இதற்கு முன் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் இம்முறை போட்டியிடுவதற்கு அம்னோ டிவிசன்கள் விண்ணப்பம் செய்துள்ளன. நடப்பு அரசியலில் இதுபோன்ற விண்ணப்பங்கள் வழக்கமான ஒன்று என அம்னோவின் தலைமைச் செயலாளர் டத்தோ அகமட் மஸ்லான் தெரிவித்தார். Pulai Sebatang மட்டுமின்றி பல தொகுதிகளில் அம்னோ போட்டியிடுவதற்கு ஆர்வமாக உள்ளன. மலாய்க்காரர்கள் பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அம்னோ டிவிசன்கள் விரும்புகின்றன. ஆனால் தங்களது பாரம்பரிய தொகுதிகளை விட்டுக்கொடுக்க தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் மறுத்து வருகின்றன. எனினும் இது குறித்து அம்னோ தலைமைத்துவம் மற்றும் மாநில தலைமைத்துவம் முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close