
நியூசிலாந்து ஜூலை 20- நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில்
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் சூழலில், பொது இடத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலால் பதற்றமான நிலை நீடிக்கிறது.
காலை 7.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை துப்பாக்கியால்
சுடத்தொடங்கினார். இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதால் வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தின் சில மீட்டர் தொலைவில்தான் நார்வே அணி ஹோட்டலில் தங்கியிருந்தது.
இருப்பினும் உலகக்கோப்பை போட்டியை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெறவில்லை எனக்கூறும் காவல்துறை, துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு மனநல பிரச்சினை இருந்ததாக கூறியுள்ளது.