
பிரஸ்ஸெல்ஸ், நவ 28 – உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தில், பெல்ஜியமை , Morocco 2- 0 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதை அடுத்து, Brussels மத்திய பகுதியில் கலவரம் மூண்டது.
தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், காரையும், Skuter- ரையும் எரித்ததோடு, வாகனங்கள் மீது கற்களை வீசியதால், கூட்டத்தினரை கலையச் செய்ய போலீசார் நீரைப் பாய்ச்சியதோடு , கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
இந்த கலவரத்தால் , அப்பகுதியில் பாதாள ரயில் சேவையும் பாதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.