Latestவிளையாட்டு
உலகக் கிண்ண ஆசிய கிண்ண தகுதிச் சுற்று காற்பந்து போட்டி; தொடக்க ஆட்டத்தில் மலேசியா வெற்றி

கோலாலம்பூர், நவ 17 – உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ண தகுதிச் சுற்றுக்கான காற்பந்து போட்டியில் மலேசியா தனது தொடக்க ஆட்டத்தை வெற்றியோடு முடித்துக் கொண்டுள்ளது. நேற்றிரவு நடபெற்ற டி பிரிவுக்கான அந்த ஆட்டத்தில் மலேசிய குழு 4 -3 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தான் அணியை வீழ்த்தியது. முற்பகுதி ஆட்டத்தில் 2 -1 என்ற கோல் கணக்கில் மலேசியா பின்தங்கியிருந்தாலும் பிற்பகுதி ஆட்டத்தில் சுறுசுறுப்பான தாக்குதல்களை நடத்தி இறுதியில் 4- 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இம்மாதம் 21 ஆம் தேதி மலேசியா தனது அடுத்த ஆட்டத்தில் தைவான் குழுவை சந்திக்கிறது. அதன் பின் மார்ச் 21 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக ஓமன் அணியையும் ஜூன் 6ஆம் தேதி கிர்கிஸ்தான் அணியுடனும் மலேசியா மோதவிருக்கிறது