Latestஉலகம்

உலகக் கிண்ண காற்பந்து போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பிரான்ஸ்

டோஹா, நவ 23 – உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் இன்று அதிகாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணி எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட எளிதாக 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டம் தொடங்கிய 9ஆவது நிமிடத்திலேயே ஆஸ்திரேலியாவின் Craig Goodwin ஒரே கோலை அடித்து பிரான்ஸ் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் பின்னர் இந்த ஆட்டத்தை முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பிரான்ஸ் குழுவினர் அடுத்தடுத்த நான்கு கோல்களை அடித்தனர்.

இதனிடையே சி பிரிவில் மெக்சிக்கோவுக்கும் போலாந்து குழுவுக்குமிடையே நடைபெற்ற மற்றொரு ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிவுற்றது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் முதல் முறையாக பிரான்சைச் சேர்ந்த Stephanie Frappart என்ற பெண் நடுவர் இந்த ஆட்டத்தின் நடுவராக பணியாற்றினார். தற்போது கட்டாரில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் Staphanie யுடன் ,
Rwanda ( ருவாண்டா) வைச் சேர்ந்த Salima Mukasanga மற்றும் ஜப்பானைச் சேர்ந்த Yamashita Yoshimi ஆகிய மூன்று பெண்கள் நடுவர்களாக பணியாற்றி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!