உலகக் கிண்ண காற்பந்து போட்டி தென் கொரியாவிடம் போர்த்துகல் அதிர்ச்சி தோல்வி

டோஹா, டிச 3 – உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற G பிரிவுக்கான ஆட்டத்தில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் குழுவை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது . கட்டார் Education City விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் தென் கொரியாவுக்கான வெற்றி கோலை 91ஆவது நிமிடத்தில் அதன் முன்னணி ஆட்டக்காரர் Sou Heung Min அடித்து போர்த்துக்கல் குழுவின் ரசிர்களை திகைப்பில் ஆழ்த்தினார். இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் போர்த்துகல் எறகனவே அடைந்த இரு வெற்றிகளினால் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
G பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் Switzerland 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி நோக்கவுட் முறையிலான இரண்டாவது சுற்றுக்கு தேர்வு பெற்றது.
இதனிடையே இரண்டாவது சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்றிருந்தும் கெமருன் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.