Latestஉலகம்

உலகக் கிண்ண காற்பந்து போட்டி பாதுகாப்பிற்காக 3,000 போலீஸ்காரர்களை துருக்கி அனுப்புகிறது

அங்காரா, செப் 24 – உலகக் கிண்ண காற்பந்து போட்டியை ஏற்று நடத்தும் கட்டார் விளையாட்டரங்குகள் மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்துதவற்காக 3,000த்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களை துருக்கி அனுப்பிவைக்கும் .

ஒரு மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு பாதுகாப்பிற்கு போதுமான போலீஸ்காரர்கள் தேவை என்பதால் துருக்கியின் உதவியை கட்டார் நாடியுள்ளது. உலகக் கிண்ண காற்பந்து போட்டியின்போது கட்டாருக்கு 12 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கி மற்றும் கட்டாருக்கிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு ஏற்ப கலகத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 3,000 போலீஸ்காரர்களையும் , சிறப்பு நடவடிக்கைக்கான 100 போலீஸ்காரர்களையும் துருக்கியே அனுப்பும். மேலும் வெடிகுண்டுகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்த 50 நிபுணர்கள் மற்றும் 80 மோப்ப நாய்களையும் கட்டாருக்கு துருக்கி அனுப்பிவைக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!