உலகக் கிண்ண செஸ் போட்டி இரண்டாவது இடத்தை பெற்று இந்தியர்களின் இதயங்களை வென்றார் பிரக்ஞானந்தா இந்திய தலைவர்கள் புகழாரம்

புதுடில்லி, ஆக 25 – நிலவின் தென்துருவ பகுதியில் கால் பதித்து உலகில் சாதனையை ஏற்படுத்திய இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையை ஏற்படுத்தியிருக்கிறார் இளம் செஸ் விளையாட்டாளரான பிரக்ஞானந்தா. அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கிண்ண செஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் இரண்டாவது இடத்தை பிரக்ஞானந்தா பெற்ற போதிலும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயத்தை கவர்திருக்கிறார் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ் நாட்டு கவர்னர் ரவி உட்பட இந்திய தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னுடன் இறுதியாட்டத்தில் மோதிய 18 வயதுடைய இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா டை பிரேக்கர்ஸ் சுற்றில் தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தைப் பெற்றார். இதற்கு முன் அவர் உலகின் இரண்டாவது நிலை ஆட்டக்காரரான ஜப்பானின் Nakamura மற்றும் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான Fabiano Caruana வையும் வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார். இதன் மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் வாய்பையும் மீண்டும் பெற்றுள்ளார்.