
புபனேஸ்வர், ஜன 15 – உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மலேசியா நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் மோதியது. மும்முறை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கும் நெதர்லாந்து அந்த ஆட்டத்தில் 4 -0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
உலகின் மூன்றாம் நிலை சிறந்த குழுவாக கருதப்படும் நெதர்லாந்து இந்த ஆட்டத்தின் பெரும்பகுதியை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. மலேசிய குழுவினர் அவ்வப்போது தாக்குதலை நடத்தியபோதிலும் நெதர்லாந்தின் தற்காப்பு அரணை மீறி ஊடுருவ முடியவில்லை. மலேசியா குழு நாளை சிலி குழுவுடன் மோதவிருக்கிறது.
இதனிடையே நேற்று நடைபெற்ற சி பிரிவுக்கான மற்றொரு ஆட்டத்தில்
New Zealand அணி 3-1 என்ற கோல் கணக்கில் Chile குழுவை வீழ்த்தியது.
B பிரிவுக்கான ஆட்டத்தில் ஜெர்மனி 3- 0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்ற வேளையில் மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 5 – 0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.