Latestமலேசியா

5 மாநிலங்களில் காட்டு தீ பரவும் அபாயம்

கோலாலம்பூர், பிப் 27 – வறட்சி மற்றும் கடுமையான வெப்ப நிலையைத் தொடர்ந்து சிலாங்கூர், ஜோகூர், சரவாக், பஹாங் மற்றும் சபா ஆகிய 5 மாநிலங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் இருப்பதாக தீயணைப்புத்துறை அடையாளம் கண்டுள்ளது. அந்த ஐந்து மாநிலங்களிலும் 201,000 ஹெக்டர் நிலம் கரி மண்ணை கொண்டிருப்பதால் காட்டுத் தீ ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

வடிகால் நீர்ப்பாசணத் துறை, கனிம வளத்துறை , நிலவியல் அறிவியல்துறை ஆகிய நிறுவனங்களிடையே தீயணைப்புத்துறை ஒத்துழைத்து வருவதாகவும் காட்டுத் தீ பரவும் வாய்ப்பை கொண்ட நிலங்களை கொண்டுள்ள மாவட்ட அலுவலகங்களுடனும் தீயணைப்புத்துறை அணுக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!