Latestஇந்தியாவிளையாட்டு

உலகக் கிண்ண ஹாக்கி ; வேல்ஸ் குழுவை வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் இந்தியா

புவனேஸ்வரர். ஜன 16 – உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து குழுவை வீழ்த்த முடியாமல் கோல் எதுவுமின்றி சமநிலைக் கண்டதால் தற்போது இயல்பாக காலிறுதியாட்டத்திற்கு தேர்வு பெறுவதில் இந்தியா சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்தியக் குழு எதிர்வரும் 19 – ஆம் தேதி வேல்ஸ் குழுவுடன் மோதவிருக்கிறது. அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதியாட்டத்திற்கு இயல்பாக தகுதி பெறமுடியும். இந்தியாவுடன் டி பிரிவில் ஸ்பெய்ன், இங்கிலாந்து , வேல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதல் இடத்தை பெறும் குழு மட்டுமே இயல்பாக காலிறுதியாட்டத்திற்கு தேர்வு பெறமுடியும். இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் 2- 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்னை வீழ்த்தியிருப்பதால் கடைசி ஆட்டத்தில் வேல்ஸ் குழுவை சந்திக்கிறது. இதனிடையே நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெய்ன் 5 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் குழுவை வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!