Latestசினிமா

உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் வெளியீடு ; தமிழக திரையரங்குகளில் திருவிழா

சென்னை, பிப் 24 – நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் உலககெங்கிலும் உள்ள திரையரங்குகளை நாடியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 1,000 -கும் அதிகமான திரையரங்குகளில் அப்படம் வெளியாகி டிக்கெட்டுகள் அனைத்துமே, முன்பதிவு தொடங்கிய நாளே விற்று தீர்க்கப்பட்டுள்ளன.

கட் அவுட் , பேனர்கள், பட்டாசு வெடிகள் என, வலிமை திரைப்படத்தை வெளியிட்டுள்ள திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தங்களது ஆசை நாயகனை திரையில் பார்த்த உற்சாகத்தில் அஜித்தின் ரசிகர்கள் உள்ளனர்.

இயக்குநர் வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படத்திற்கு யுவன் ஷுங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் போனி கபூர் அப்படத்தை தயாரித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!